கைக்குழந்தையுடன் இளைஞர் தீக்குளிக்க முயற்சி : மதுரையில் பரபரப்பு….

Author: kavin kumar
24 January 2022, 4:59 pm
Quick Share

மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் குடும்ப பிரச்சனை குறித்து உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஒரு வருடம் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.இந்த நிலையில் ஆனந்தன் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அவரது 2 வயது ஆண் குழந்தையுடன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து அவரது கையில் இருந்த பெட்ரோல் கேனை பறித்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் கைக்குழந்தையுடன் ஆனந்தனை காவல்துறையினர் தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 516

0

0