அடையாளம் தெரியாத வாகனம் மோதி கோர விபத்து… தூக்கி வீசப்பட்ட அண்ணன், தம்பி… உடல்நசுங்கி பரிதாப பலி…!!

Author: Babu Lakshmanan
23 May 2022, 2:40 pm
Quick Share

மேலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் களியமங்களத்தை சேர்ந்தவர் பீர்தீன் நயினார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், இவரது மூத்த மகனான நியாஸ் லுக்மான் (22) மற்றும் கடைசி மகனான இயாஸ் முகமது (14) ஆகியோர் மேலூர் அருகே கருங்காலக்குடியில் உள்ள தங்களது பெரியம்மா வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இருசக்கர வாகனத்தில் வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில் திரும்பி கொண்டிருக்கும் பொழுது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொட்டாம்பட்டி காவல்துறையினர் இருவர் உடலையும் மீட்டு உடற் கூராய்விற்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 571

0

0