ஜுன் 20க்கு முன்பே கூட பள்ளிகளை திறங்க… ஆனா, சனிக்கிழமை வகுப்புகள் மட்டும் வேண்டாம்… தமிழக அரசுக்கு பறந்த பரபரப்பு கடிதம்..!!

Author: Babu Lakshmanan
23 May 2022, 4:01 pm
School Sat Leave -Updatenews360
Quick Share

சென்னை : அடுத்த கல்வியாண்டில் அனைத்து பாடங்களையும் நிறைவு செய்யும் விதமாக, ஜூன் 20 க்கு முன்னர் பள்ளிகளை திறக்க தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்தக்காலங்களில் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாததால் பாடங்கள் குறைக்கப்பட்டு அதற்கேற்ப கற்றல்-கற்பித்தல் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் பள்ளி வேலைநாளாக இருந்தது. இதன் மூலம் மன அழுத்தத்தோடு குறைந்த மாணவர்களே பள்ளிக்கு வந்தது குறிப்பிடதக்கது.

ஆசிரியர்களும் பல்வேறு பணிகளோடு மன அழுத்தத்தோடு பணிபுரிந்தது அனைவரும் அறிந்ததே. வரும் கல்வியாண்டில் முழுமையாக பாடங்களை மாணவர்கள் படித்தால்தான் போட்டித்தேர்வுகளை எளிதில் அணுகமுடியும். ஏற்கனவே கல்வி முடக்கம் ஏற்பட்டு இருந்ததை மீட்டு தான் நேரடி வகுப்புகள் மூலம் ஓரளவுக்கு பழையநிலையினை கொண்டு வந்தோம்.

இந்நிலையில் நேரடி வகுப்புகள் தள்ளிபோவது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும். குறிப்பாக சனிக்கிழமை பள்ளிகள் இங்குவது மாணவர்களின் முழுகவனத்தை சிதறடிக்கும் சுதந்திரம் பறிக்கப்படுவதாக எண்ணுகிறார்கள். மேலும் சனிக்கிழமை பள்ளிகள் இயங்குவதால் முழுமையாகப் பயன்தராது என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக மாணவர்கள் உயர்,மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறைந்துள்ளதை அறியமுடிகின்றது.

உள்ளமும் உடலும் ஒருசேர இருந்தால்தான் கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக இருக்கும். 1முதல் 12 ஆம் வகுப்புகள் வரை நேரிடை வகுப்புகள் மூலம் ஜூன்-20 க்கு முன்னர் பள்ளிகள் திறக்க மாண்புமிகு .முதலமைச்சர் அவர்கள் ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி ஆசிரியர்கள் முழுமையாகக் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வழிகாட்டவேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியைத் தவிர மற்ற பணிகளை தவிர்க்கவும். பாடங்களை குறைக்காமல் பாடம் நடத்தும்பொருட்டு ஜூன் 20 க்கு முன்னர் பள்ளிகள் திறக்க ஆவனசெய்யும்படி மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 541

0

0