மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்… மிதித்தே கொன்ற கும்பல் ; விசாரணையில் பகீர்..!!

Author: Babu Lakshmanan
9 May 2023, 4:32 pm

மதுரை சித்திரை திருவிழாவில் வழிப்பறி செய்து வந்த கும்பல், செயினை பறிக்க முயன்ற போது மாட்டிக்கொண்ட ஒருவரை அடித்து மோதிக்கொண்ட பலியான சம்பவத்தில் 6 பேர் கைது

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் கடந்த 5 தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் கூடினர்.

கூட்டத்தில் வழிப்பறி செய்து வந்த கும்பல் கருப்பாயூரனியில் இருந்து கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சியடிக்க வந்தவர்களிடம் செயினை பறிக்க முயன்ற போது, எம்கேபுரத்தை சேர்ந்த சூர்யா என்ற இளைஞர் சிக்கி கொண்டார்.
அவரை மடக்கி பிடித்து தாக்கியதில் சூர்யா இறந்துவிட்டார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கருப்பாயூரணியை சேர்ந்த முத்துப்பாண்டி, குருநாதன், விஜய், முத்து, ராஜேஷ், ராஜபாண்டி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?