மதுரையில் 13000ஐ கடந்த கொரோனா தொற்று: ஒரே நாளில் 116 பேருக்கு பாதிப்பு
18 August 2020, 10:04 amமதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி தருகிறது.
தமிழகத்தில் சென்னையை சேதப்படுத்திய கொரோனா தென் மாவட்டங்களை கடுமையாக பாதித்து வருகிறது. மதுரை, நெல்லை, தூத்துக்குடி என பெரும்பாலான மாவட்டங்கள் கொரோனா பிடியில் சிக்கி தவிக்கின்றன.
தொடக்கத்தில் குறைவாக இருந்த மதுரை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொற்று அதிகரித்துள்ளது. வெகு விரைவில் 10000 கொரோனா தொற்றுகள் பதிவாகின.
இந் நிலையில் தொற்றானது 13000 கடந்து அதிர்ச்சி தந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக இருக்கிறது. இதன் மூலம் மதுரை மாவட்டத்தின் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு 13004 ஆக பதிவாகி உள்ளது.
அதிகரிக்கும் தொற்றுகள் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை தீவிரமாக இறங்கி உள்ளது.