உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.17 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி…!!

Author: Babu Lakshmanan
18 March 2024, 6:29 pm

மதுரை ; மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.17 கோடி மதிப்பிலான தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மதுரை மாவட்டம் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரை விமானநிலையம் அருகேயுள்ள பெருங்குடி சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் பறக்கும் படையினர் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தில் இருந்து 17 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கம் மற்றும் வைரத்தை பறிமுதல் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தெற்கு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட நிலையில் கருவூலத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. தங்கம் பறிமுதல் குறித்து மாவட்ட நிர்வாகம் முழுமையான தகவல் வெளியாகாத நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?