அங்காடித்தெரு பாணியில் மலர்ந்த தகாத காதல்… லாட்ஜில் ரூம் எடுத்த ஜோடி ; போலீஸுக்கு வந்த திடீர் அழைப்பு…!!

Author: Babu Lakshmanan
10 October 2023, 8:25 pm

அங்காடித்தெரு பாணியில் மலர்ந்த தகாத காதல்… லாட்ஜில் ரூம் எடுத்த ஜோடி ; போலீஸுக்கு வந்த திடீர் அழைப்பு…!!

மதுரை அருகே பெற்றோர் கண்டித்ததால் கள்ளக்காதலனுடன் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (38) என்பவர் திருமணமான ஒரு மாதத்தில் தனது மனைவியை பிரிந்த நிலையில், மாட்டுத்தாவனி அருகே உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை அடுத்த அரும்பனூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சனி (25) என்பவர் தனது கணவனை பிரிந்து ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையுடனும் வாழ்ந்து வரும் நிலையில், இவரும் அதே கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். ஒரே தளத்தில் இருவரும் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 6 மாத காலமாக இருவருக்கும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.

இருவரும் ஜவுளிகடைக்கான பணியாளர்கள் தங்கும் விடுதியில் தங்கிவந்தாலும் கூட, அவ்வப்போது மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பிரஸ் காலனி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அடிக்கடி அறை எடுத்து தங்கி வந்துள்ளனர்.

இதுபோன்று நேற்று மதியமும் அறையெடுத்து இருவரும் தங்கியுள்ள நிலையில், இன்று காலை அறையிலிருந்து துர்நாற்றம் வீசியதை கண்டு விடுதியின் மேலாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். புதூர் காவல்துறையினர் விரைந்து வந்து அறையின் கதவை உடைத்து பார்த்த போது இருவரும் விஷம் அருந்தி சடலமாக கிடந்தனர்.

இதனையடுத்து, இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் இருவரின் கள்ளக்காதல் ரஞ்சனியின் வீட்டாருக்கு தெரியவர இரண்டு குழந்தைகள் உள்ளது. இது வேண்டாம், அசிங்கம் என பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த ரஞ்சனி கள்ளக்காதலர் கார்த்திகேயனுடன் விஷமருந்தி தற்கொலை செய்தது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது‌.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!