பொது இடத்தில் காதல் ஜோடிகள் செய்த காரியம்.! முக சுழிப்பை ஏற்படுத்திய சம்பவம்.!!
15 August 2020, 11:21 amமதுரை : ஊரடங்கு மீறி நள்ளிரவு நேரத்தில் பொது இடத்தில் சில்மிஷத்தில் ஈடுபட்ட காதல் ஜோடிகளின் செயல் முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பதனால் பொதுமக்கள் பொது இடங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்,பொது இடங்கள் சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று இரவு 8 மணிக்கு மேல் அனைத்து வணிக வளாகங்களும் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில்,பொதுமக்கள் அதிகம் கூடும் பூங்காக்கள் சுற்றுலாத்தலங்கள், திரையரங்குகள் என அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் நள்ளிரவு நேரங்களில் காதல் ஜோடி இருவர் ஊரடங்கை மீறி முககவசம் அணியாமலும் பொது இடத்தில் அமர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை அதன் வழியாக சென்ற ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்,இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.