கரும்புகையுடன் வெளியேறிய தீ… பிளாஸ்டிக் கடையில் நிகழ்ந்த சம்பவம்… மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
17 July 2023, 11:25 am

மதுரை ; மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே மாசி வீதியில் பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே இருக்கக்கூடிய தெற்கு மாசி வீதியில் உள்ள டிஜிஎம் பிளாஸ்டிக் கடையின் முதல் மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து திடீர் நகர், அனுப்பானடி, தல்லாகுளம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஐந்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்தன. முதல் மாடியில் இருந்து கரும்புகையுடன் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் இருக்கக்கூடிய பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்த கடையில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிலை சுற்றி பழமையான கட்டிடங்களில் அடிக்கடி தீ விபத்து நடப்பது குறிப்பிடத்தக்கது.

தீயணைப்புத் துறையினர் மாநகராட்சி சார்பாக பழமையான கட்டிடங்கள் கண்டறிப்பட்டு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

  • Mari Selvaraj Rajinikanth Movie இரண்டு முறை கதை கேட்டும் மாரி செல்வராஜை ஒதுக்கிய பிரபல ஹீரோ..காரணம் இது தானா.!