பூண்டு, வெங்காய மூட்டைகளை திருடிய ஆசாமி ; சிசிடிவி காட்சி வெளியீடு.. போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
12 January 2023, 9:04 am

வெள்ளை பூண்டு மற்றும் வெங்காய மூட்டைகளை நூதன முறையில் திருடி வந்த ஆசாமி கைது செய்யப்பட்ட நிலையில், திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியது.

மதுரை மாநகர் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி இருக்கக்கூடிய கீழ மாசி வீதிகளில் பலசரக்கு பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் கடை வாசலில் இறக்கி வைக்கப்படும் வெள்ளை பூண்டு மற்றும் வெங்காய மூட்டைகள் மர்ம நபர்கள் திருடி செல்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்ததுள்ளது.

இந்த நிலையில், நேற்று மதுரை மாநகர் வெண்கல கடைக்காரர் பகுதியில் கடை வாசலில் வைக்கப்பட்டிருந்த வெள்ளை பூண்டு மூட்டையை மர்ம நபர் ஒருவர், தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் திருடி செல்வதை கண்ட அந்த பகுதியைச் சேர்ந்த சுமை தூக்குத் தொழிலாளர்கள் விரட்டி சென்று பிடிக்க முயன்றுள்ளார்கள்.

இருப்பினும், அவர் தப்பி ஓடிய நிலையில் சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விளக்குதூண் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வண்டியின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், அவர் புது விளாங்குடி பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் என்பதும், இவருக்கு வயது 42 என்பதும் தெரியவந்தது.

இவர் மதுரை மாநகர் பகுதியில் இதுபோன்று வெங்காய மூட்டைகளையும் வெள்ளை பூண்டு, காய்கறி உள்ளிட்ட பொருட்களை கடந்த பல மாதங்களாக திருடி வந்தது தெரியவந்துள்ளது. மேலும், இவர் மீது ஐந்து இருக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இவர் திருடில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

https://player.vimeo.com/video/788515913?h=e2e75ad1a6&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?