டயர் வெடித்து கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : அரசு போக்குவரத்து ஊழியர் மற்றும் அவரது தாய் பலி!!

Author: Babu Lakshmanan
16 August 2022, 9:23 pm
Quick Share

திண்டுக்கல் ; மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் ஆவியூர் விளக்கு அருகே கார் டயர் வெடித்து விபத்து அரசு போக்குவரத்து ஊழியர் மற்றும் அவரது தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியைச் சார்ந்தவர் ஆனந்த். இவர், திண்டுக்கல் மாவட்ட அரசு போக்குவரத்து பணிமலையில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் தனது குடும்பத்துடன் திருச்செந்தூரில் சாமி கும்பிட்டு விட்டு சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு காரில் திரும்பி உள்ளார்.

விருதுநகர் அருகே உள்ள ஆவியூர் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக, காரின் டயர் வெடித்து அருகே இருந்த பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. இதில், கார் ஓட்டி வந்த ஆனந்த் மற்றும் அவரது தாய் மீனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும், காரில் வந்த ஆனந்தின் உறவினர்கள் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு நபர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், நான்கு நபர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து ஆவியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 204

0

0