டீக்கடை உரிமையாளரின் தலையை வெட்டிய கும்பல் ! ஓட் ஓட விரட்டி படுகொலை!!
26 August 2020, 1:24 pmமதுரை : ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் தேநீர் கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து கொலை செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை புதூர் பேருந்து நிலையத்தில் தேநீர் கடை நடத்திவரும் முருகன் என்பவர் இன்று அதிகாலை தனது கடைக்கு தேவையான பால் வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் மதுரை புதூர் அருகே சூர்யாநகர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது தனியார் பள்ளியின் வாசலில் நின்றுகொண்டிருந்த மர்ம கும்பல் வாகனத்தை வழிமறித்து முருகனை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடுரமாக தாக்கினர்.
இதையடுத்து உயிருக்கு பயந்து ஓடிய முருகனை துரத்திபிடித்து ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து கொலை செய்தனர். கொலை சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்திவருகின்றனர், முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
அதிகாலை நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஓட ஓட விரட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 கொலைகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.