அவுட்டுக்காயை சாப்பிட்ட மக்னா யானை! சிகிச்சை பலனின்றி பலி!!

9 September 2020, 10:42 am
Magna Elephant - updatenews360
Quick Share

கோவை : கோவை அருகே வாயில் காயம்பட்டு சுற்றிவந்த மக்னா யானை இன்று அதிகாலை உயிரிழந்தது.

கோவை மாவட்டத்தில் மனித-யானை மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக தொடர்ந்து யானைகள் உயிரிழந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு தந்ததுக்காக வெட்டிக் கொல்லப்பட்டது ஒரு யானை. அதற்கு முன்பு கேரளாவில் ஒரு யானை வெடிமருந்தை சாப்பிட்டு வாயில் காயத்துடன் இறந்து போனது .

அதேபோல கோவையில், உடல் காயமடைந்து எழுந்த நடக்க முடியாமல் இறந்து போனது. அந்த வகையில் தற்போது அவுட்டுக்காய் என்னும் வெடியை சாப்பிட்டு நாக்கு சேதமாகி கடந்த ஒரு மாத காலமாக வலியுடன் ஒரு மக்னா யானை சுற்றி வந்தது .

இதற்கு மருந்து அளித்து காப்பாற்ற தமிழக , கேரள வனத்துறையினர் முயற்சி செய்தனர். ஆனால், முயற்சி பலனளிக்காததால் நேற்று கைவிரித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை கோயம்புத்தூர் மாவட்டம் சோலையூர் அருகிலுள்ள மரப்பாலம் பகுதியில் இந்த மக்னா யானை உயிரிழந்தது.

Views: - 1

0

0