தாய் மகன் குறித்து கொச்சையாக பேசிய மகா விஷ்ணு.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2024, 8:17 pm

அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவாற்றி மகா விஷ்ணு விவகாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதே போல மாற்றுத்திறனாளிகள் குறித்து அவர் பேசிய பேச்சால் கைது செய்யப்பட்டு 3 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தாய் மகன் இடையிலான புனித உறவை மிக கொச்சையாக வர்ணித்து, காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளால் ஆபாசமாக சொற்பொழிவாற்றிய மகாவிஷ்ணுவின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் முருக பக்தர்களையும் கொச்சைப்படுத்தியுள்ளார்.

முருக பக்தர்களை பொறுத்தவரை திருப்புகழ் என்பது வழிபாட்டு மற்றும் வாழ்க்கை முறை நூல். அப்படிப்பட்ட திருப்புகழ் தந்த அருணகிரிநாதரைப் பற்றி தரக்குறைவாக மகாவிஷ்ணு பேசியிருப்பது ஆன்மிக வட்டாரத்தில் உச்சக்கட்ட கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

  • vismaya mohanlal introduce as a heroine in thudakkam movie சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!