மழையிலும் அணையாத மகாதீபம் : உச்சிமலையில் சுடர்விட்டு எரியும் காட்சிகள் இணையத்தில் வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2022, 2:38 pm
Mahadeepam - Updatenews360
Quick Share

இந்த ஆண்டு கார்த்திகை தீபம் டிசம்பர் 6 ஆம் தேதி நிறைவடைந்துள்ள நிலையில், தெப்ப உற்சவம் களைகட்டியுள்ளது. இதற்காக அதிகாலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்அலங்காரம் செய்யப்பட்டு கோயில் ராஜகோபுரம் முன்புள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் தனது குடும்பத்துடன், கிரிவலத்தின் மகத்துவத்தை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அப்பொழுது பக்தர்கள் வழிநெடுகிலும், சாமிக்கு மாலை அணிவித்து, ஆடைகள் வழங்கி, தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.

மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். அண்ணாமலை உச்சியில் தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர்விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 16ஆம்தேதி வரை தரிசிக்கலாம்.

திருவண்ணாமலையில் 4ஆம் நாளான இன்றும் மலை உச்சியில் மகா தீபம் சுடர் விட்டு எரிந்து வருகிறது. மாண்டஸ் புயல் காரணமாக மாவட்டத்தில் பெய்து வரும் மழையிலும் மகா தீபம் எரிந்து வருகிறது. இதனை பொதுமக்கள் கண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.

தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Views: - 350

0

0