2 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் முக்கிய நிகழ்வு… நாளை மறுநாள் கோவை வரும் முதலமைச்சர் ஸ்டாலின் : எதுக்கு தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2022, 6:34 pm

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 19-ஆம் தேதி கோவை செல்கிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற உள்ள மலர் கண்காட்சி மற்றும் கோவையில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (மே18) மாலை கோவை செல்கிறார்.

நாளை மறுநாள் காலை கோவை வஉசி மைதானத்தில் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற உள்ள பொருநை அகல்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் ஓவியக்கண்காட்சி முதல்வர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து கோவை, திருப்பூர், ஈரோட்டை சேர்ந்த தொழில் முனைவோர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். அதன்பின் 20-ஆம் தேதி காலை ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் நடைபெற உள்ள மலர் கண்காட்சியை திறந்து வைக்க உள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?