மெரினாவில் மணலில் புதைத்து வைத்து சாராய விற்பனை… தோண்ட தோண்ட கிடைத்த சாராய பாட்டில்கள்.. சிக்கிய 3 பெண்கள்!!

Author: Babu Lakshmanan
17 May 2022, 7:13 pm
Quick Share

சென்னை : மெரினா கடற்கரையில் மணலில் பதுக்கி வைத்து சாராய விற்பனை செய்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

மெரினாவில் மணலில் பதுக்கி வைத்து சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, நேதாஜி – கண்ணகி சிலைக்கு நடுவே இருந்த மணற்பரப்பில் சாராயம் புதைத்து வைத்து, விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மணலில் புதைத்து வைத்து சாராயம் விற்பனை செய்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தை ஜென்தூஸ் கோஸ்லயா, சில்பா போஸ்லே, சுனந்தா ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் பதுக்கி வைத்திருந்த 35 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவில் இருந்து சாராயம் கடத்தி வரப்பட்டு, மெரினா கடற்கரை மணலில் புதைத்து சாராயத்தை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Views: - 484

0

0