குறிச்சி குளத்தில் மிதந்த ஆண் சடலம்: கொலையா? தற்கொலையா?…போலீசார் விசாரணை..!!
Author: Aarthi Sivakumar22 October 2021, 1:01 pm
கோவை: குறிச்சி குளத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குறிச்சி குளத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக போத்தனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீயணைப்பு மீட்புக் குழுவுடன் வந்த போலீசார் குளத்தில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டனர்.
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முன்னதாக சடலமாக மீட்கப்பட்டவர் யார் என்பது குறித்து அறிய உள்ளூர் மக்களிடம் இறந்தவரின் புகைப்படத்தை காட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Views: - 418
0
0