காங்கிரஸ் ஓட்டிய படம் ஓடாததால் புதிய ‘டிராமா நடிகராக‘ மம்தா சேர்ப்பு : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2021, 11:57 am
Bjp Annamalai -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாக ஒரு டிராமா அரசியல் செய்து வருகிறது திமுக என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலில் செய்தியாளர் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகர்கோவில் வருகை தந்தார். நாகர்கோவில் நாகராஜா கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது : அதிமுக பாஜக கூட்டணியில் எந்த விதமான குழப்பமும் இல்லை. அண்மையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆகியோர் டெல்லி சென்று பாரத பிரதமரை சந்தித்து தமிழ் நாட்டிற்கு தேவையான திட்டங்கள், தேவையான தடுப்பூசி மருந்துகள் உள்ளிட்டவற்றை பற்றி பேசினர்.

எல்லா கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலுக்கு எப்படி தயாராகி வருகிறதோ அதை விட பாஜக அதிகமாக தயாராகி வருகிறது என்ற அவர், உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் போது தான் அதிகமான நண்பர்கள் தலைவர்களாக உருவாவதற்கு வாய்ப்பாக உள்ளது என்றும் உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை பாஜக தயாராகத் தான் இருக்கிறது என்றார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். பொதுக்குழுவில் முறையாக தேர்வு செய்யப்பட்டவர்கள் . ஐந்து வருடகாலமாக தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி செய்தது அதிமுக என்றும் அதிமுகவிடம் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கேள்வி நீங்கள் கேட்பதற்கு யூகத்திற்கு பதில் சொல்ல முடியாது என அவர் தெரிவித்தார் .

திருக்குறளை வழிகாட்டியாக உள்ளது நமது பாரத பிரதமர் பலமுறை திருக்குறளை மேற்படி பல்வேறு இடங்களில் பேசி வருகிறார். திருக்குறளை தேசிய மொழியாக நிச்சயமாக அறிவிக்க வேண்டும் அதில் எந்தத் தவறும் இல்லை.

மத்திய அரசு மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சியில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டை பொறுத்தவரை மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாக ஒரு டிராமா அரசியல் செய்து வருகிறார்கள் என குற்றம்சாட்டினார்.

மீன்வள மசோதாவிற்கு தமிழ்நாடு உட்பட பல இடங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதனால் நாளை சென்னையில் திமுகவை கண்டித்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை பாஜக மீனவர் அணி சார்பில் நடத்துவதாக கூறினார்.

தேசிய மீன் வள மசோதா சம்பவத்தில் திமுக ஒரு டிராமா அரசியலை செய்கிறார்கள். அவர்கள் கடந்த தேர்தல் அறிக்கையில் மீனவர்களுகாக அறிவித்த எதுவும் நிறைவேற்றவில்லை .

தொலைப்பேசி ஓட்டு கேட்கபட்டதாக எதிர் கட்சிகள் கூறுவது இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக கூறுகின்றனர், வேலையில்லாத கட்சி காங்கிரஸ் கட்சி, கதை திரைக்கதை வசனம் என்பவற்றை எழுதி ஒரு படத்தை பாராளுமன்றத்தில் போட்டார்கள். அது அரை மணி நேரத்திற்கு மேல் ஓடவே இல்லை என விமர்சித்தார்.

மேலும் ராகுல் காந்திக்கு வேறு வேலை இல்லை, அதே போல மம்தா பேனர்ஜி இந்த டிராமா ஆர்டிஸ்ட்டில் புதியதாக சேர்ந்துள்ளார். எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ப்பதாக ஒரு டிராமா போடுகிறர்கள். அது ஒரு போதும் எடுபடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

Views: - 354

0

0