வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை…ரெய்டு சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி: கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல்..!!

Author: Rajesh
27 April 2022, 1:55 pm
Quick Share

திருவள்ளூர்: பொன்னேரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது வேன்பாக்கம் பள்ளம் பகுதியில் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1 கிலோ 400 கிராம் கஞ்சா, மற்றும்1 நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

மேலும், கார்த்திக் என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஜவகர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட கார்த்திக்கிடம் போலீஸார் கஞ்சா கடத்தல் சம்பவம் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 667

0

0