ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த ஒருவர் கைது

12 June 2021, 5:57 pm
Quick Share

திருவள்ளூர்: ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்து 1.600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் நகரி அடுத்த ஒஜி குப்பம் பகுதியில் இருந்து கஞ்சா கடத்தி வந்து திருத்தணி பகுதியில் விற்பனை செய்வதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண் குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ் பி உத்தரவின் பேரில் திருத்தணி இன்ஸ்பெக்டர் ரமேஷ் உதவி ஆய்வாளர் சுதாகர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் திருத்தணி அரசு கலைக்கல்லூரி அருகே உதவி ஆய்வாளர் சுதாகர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது,

அங்கு ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த பட்டாபிராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த சற்குணம் என்பவரை போலீசார் கைது செய்தனர். சற்குணம் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் திருத்தணி காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திருத்தணி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 7 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதால் மேலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 137

0

0