பணிபுரியும் இடத்திலேயே மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன் : அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி..!

Author: Babu
6 October 2020, 6:39 pm
nellai murder cover- updatenews360
Quick Share

கன்னியாகுமரி: குமரியில் குடும்பத்தகராறு காரணமாக விவகாரத்து நோட்டீஸ் அனுப்பியதால் ஆத்திரமடைந்த மனைவியை, கணவன் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த திருமலைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (35). மெடிக்கல் ரெப் ஆக பணியாற்றி வந்தார். இவருக்கும் ஜோஷி (32) என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இருவரும் பிரிந்து கடந்த ஒரு வருடமாக தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜோஷி விவகாரத்து கேட்டு விண்ணப்பித்து சதீஷ்க்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் அடிக்கடி குடித்துவிட்டு ஜோதியுடன் பிரச்சனை செய்து வந்துள்ளார். மேலும், அவர் தற்போது தனது மெடிக்கல் ரெப் வேலையை விட்டுவிட்டு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மதியம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகில் ஜோஷி வேலை பார்த்து வந்த தனியார் நிறுவனத்திற்கு சதீஷ் சென்றார்.

பின்னர் அங்கு அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோஷியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனைத் தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சதீஷை தேடி வருகின்றனர்.

Views: - 45

0

0