பேருந்து பின்சக்கரத்தின் முன்பு படுத்து தற்கொலை… வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி ; காரணம் குறித்து போலீசார் விசாரணை!

Author: Babu Lakshmanan
27 January 2023, 7:45 pm

கோவை அருகே அரசு பேருந்தில் பின் சக்கரத்தில் விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்தம்பாளையம் – பல்லடம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் – மஞ்சுளா தம்பதியினர். இவர்கள் தனியார் மருத்துவமனையில் உறவினரை பார்க்க அரசு பேருந்து 69டி காந்திபுரம் பகுதியில் இருந்து பட்டணம் செல்லும் பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் வரதராஜபுரம் பேருந்து நிறுத்தத்தில் அந்த தம்பதியினர், அரசு பேருந்தில் இறங்கி உள்ளனர். பாலமுருகன் பேருந்து அருகே பேக்கை வைத்துவிட்டு திரும்பும்போது, அரசு பேருந்து பின் சக்கரத்தில் விழுந்து பலியானார். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த சம்பவத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளதா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?