மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் பரபரப்பு.. குவிந்த இந்து முன்னணியினர் : சுற்றி வளைத்த போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2023, 3:16 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் தமிழக இந்து சமய அறநிலயத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவை சேர்ந்த பெண் பக்தர்கள் இருமுடி கட்டுடன் வந்து அம்மனை தரிசித்து செல்வதால் இந்த கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

இந்த கோயிலில் வருடா வருடம் மாசி பெரும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10-நாட்கள் நடைபெறுவது வழக்கம்

இந்த திருவிழாவின் போது ஹைந்தவ ஹிந்து சேவா சங்கம் சார்பில் 10-நாட்கள் சமய மாநாடு நடைபெறுவது வழக்கம்.

இந்த வருட மாசி திருவிழா மார்ச் மாதம் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் திருவிழாவின் போது நடத்தப்படும் சமய மாநாட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்தது.

இந்த நிலையில் 86-வருட பாரம்பரிய நிகழ்வான சமய மாநாட்டிற்கு தடை விதித்த இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பாக மறியல் ஆர்பாட்டம் என பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இன்று இந்து முன்னணி சார்பில் மண்டைக்காடு கோயில் முன் ஆர்பாட்டம் மற்று மறியல் போராட்டம் நடத்த பல்வேறு அமைப்புகளூக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டைக்காடு கோயில் வளாகத்தை சுற்றிலும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இருந்து போராட்டத்திற்கு வருபவர்களை தடுத்து நிறுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரிகாடு அமைத்து குமரி, நெல்லை, தூத்துக்குடி தென்காசி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இவர்கள் அந்த வழியாக வரும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பின் அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட இருந்த போராட்டங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையிலும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களையும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் கோயில் சுற்று வட்டார பகுதிகள் பரபரப்பாகவே காணப்படுகிறது.

  • New Update Announcement From Jana Naygan team Today ஜனநாயகன் படத்தின் மாஸ் அப்டேட்.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!