அண்ணாமலை கைகளை கட்டி வைத்து 100 நாள் அதை பாக்க வைக்கணும் : காயத்ரி ரகுராம் பரபர விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2023, 2:09 pm
Gayathri - Updatenews360
Quick Share

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திரையரங்கில் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம் திரைப்பட இயக்குனர் செல்வராகவன் நடிப்பில் வெளிவந்துள்ள பகாசூரன் திரைப்படத்தை பார்த்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, பகாசுரன் திரைப்படம் குடும்பத்தில் உள்ள அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் ஆகும்.

ஒரு பெண் எப்படி சுதந்திரமாக இருக்க முடியும் என்பதை எடுத்துச் சொல்லும் படம். ஒரு குடும்பத்தில் பெண் எப்படி இருக்க வேண்டும், ஆண்கள் எவ்வளவு ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும், எப்படி வளர வேண்டும், பெண்களை தவறாக சித்தரிப்பவர்களையும், பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர்களையும் குறித்த திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பாரதிய ஜனதாவில் இது போன்ற நிலை எனக்கு ஏற்பட்டது.
குறிப்பாக கடந்த மாதம் ஒரு பொங்கல் விழாவில் கலந்து கொண்ட போது கேமராவை தவறாக வைத்து எடுத்தனர்.

இது போன்றவை சாதாரண விஷயங்கள் கிடையாது. கடலூரில் தவறான சித்தரிக்கப்பட்டதால் ஒரு பெண் இறந்துள்ளார். பெண்களும், மாணவிகளும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் யாரேனும் தவறாக நடந்து கொண்டாலே அது குறித்து பெற்றோர்களிடம் தைரியமாக சொல்ல வேண்டும்.

பெண்கள் குறித்து தவறான வீடியோ எடுப்பவர்களையும், ஆடியோ ட்ராக்கிங் செய்பவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு நடந்தது போல் நிறைய பெண்களுக்கு தவறாக சித்தரிக்கும் நிகழ்வு நடந்துள்ளது. என்னை போலவே மற்ற பெண்களும் தைரியமாக வெளியில் வந்து பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும்.

பாஜக தலைவர் அண்ணாமலையை கைகளை கட்டி இழுத்து வந்து இந்த திரைப்படத்தை நூறு முறை பார்க்க வைக்க வேண்டும். பாஜகவில் இருந்து விலகி வெளியில் வந்த பிறகு ஏராளமான பிளாக்மெயில்கள் எனக்கு வந்தது.
என்னைப் பற்றிய வீடியோ இருப்பதாகவும், ஆடியோ இருப்பதாகவும், எனது புகைப்படத்தை தவறாக சித்தரித்தும், வெளியிட்டு வருகின்றனர். இது குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் அவர் ஒரு கட்சியின் பெரிய தலைவர் பதவியில் இருப்பதால் நடவடிக்கை எடுப்பதில் ஏன் தாமதமாகிறது என்பது தெரியவில்லை. ஏப்ரல் 14ஆம் தேதி பெண்களின் பாதுகாப்பிற்காக நடைபயணம் துவங்க உள்ளேன்.
அண்ணாமலை ஊழலை எதிர்த்து நடைபெறும் மேற்கொள்வதாக சொல்கின்றார். ஆனால் அவரது கட்சியில் இருக்கும் நபர்கள் குறித்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க அவரால் முடியவில்லை.

சக்தி யாத்திரை என்ற பெயரில் பெண்களுக்கான நடை பயணமாக இது இருக்கும். பாஜகவில் ஒரு பெண்ணை தவறாக சித்தரிப்பதையும், அங்கு இருக்க கூடிய பெண் நிர்வாகிகள் அமைதியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அது ஏன் என்பது அவர்களுக்கு தான் தெரியும். இது குறித்து வானதி சீனிவாசனிடமும், குஷ்புவிடமும் தான் இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று கூறினார் காயத்ரி ரகுராம்.

Views: - 272

0

0