மாண்டஸ் புயலால் அதிகரிக்கும் கடல் சீற்றம்… காட்டுப்பள்ளி சாலை துண்டிப்பு ; ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் பொதுமக்கள்…!!

Author: Babu Lakshmanan
9 December 2022, 11:05 am

திருவள்ளூர் பழவேற்காடு அருகே புயல் காரணமாக கடல் அலை சீற்றம் பழவேற்காடு காட்டுப்பள்ளி சாலை துண்டிப்பு 10 க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கோரை குப்பம் அருகே தொடர்ந்து கடல் சீற்றம் அதிகரித்து வருகிறது. பழவேற்காடு – காட்டுப்பள்ளி சாலையில் ஏரி நீருடன் கடல் நீர் கலந்ததால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், கருங்காலி, கோரை குப்பம், காட்டுப்பள்ளி, காளாஞ்சி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.

தொடர்ந்து அலைசீற்றம் அதிகரித்து உள்ள நிலையில், அதனை ஆபத்தான முறையில் கடந்து சென்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புயல் கனமழை காலங்களில் அப்பகுதியில் கடல்நீர் புகுவதால் உயர் மேம்பாலம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • surya sethupathi shared his weight loss experience for phoenix movie ஒரே வருடத்தில் 60 கிலோ Weight Loss? சூர்யா சேதுபதியின் மிரளவைக்கும் உடற்பயிற்சி அனுபவங்கள்!