ஊரடங்கினால் குமரியில் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்த மாங்காய் வியாபாரம்… மா கூழ் மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை ;

11 June 2021, 1:55 pm
mango - updatenews360
Quick Share

கன்னியாகுமரி: கொரோனா ஊரடங்கால் இரண்டு ஆண்டுகளாக மாங்காய் ஏற்றுமதி தடை செய்யப்பட்டதால், குமரி மாவட்ட மாங்காய் வியாபாரிகள், விவசாயிகளுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது .

குமரி மாவட்டத்தின் முக்கிய தொழில்களில் விவசாயம் ஒன்றாகும்.இந்த விவசாயத்தில் மாங்காய் விவசாயமும் மிக முக்கியமாக திகழ்கிறது. தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவில் இங்கு ஆண்டுக்கு 2 சீசன் காலத்திலும் மாங்காய்கள் நல்ல விளைச்சல் பெறுகிறது.

குமரி மாவட்டத்தில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் மாங்காய் பயிர் செய்யப்படும் .அதுமட்டுமின்றி சாதாரணமாக பொதுமக்களும் தங்களது வீடுகளில் மா மரங்களை நட்டு அதில் பயனடைகின்றனர் .

இந்நிலையில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கால் மாங்காய்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் தடைபட்டது. இதனால் கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.விலை வீழ்ச்சி மற்றும் ஏற்றுமதி இல்லாததால் விவசாயிகளிடம் மாமரங்களை குத்தகைக்கு எடுத்த வியாபாரிகள் மாங்காய்களை பறிக்காமல் விட்டு விட்டனர் .

ஏனெனில் மாங்காய் விலையை விட அதை பறிக்கும் கூலி செலவு அதிகமாக உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால் மாங்காய்கள் மரத்திலேயே பழுத்து அழகி கீழே விழும் சூழல் ஏற்பட்டு வருகிறது .

இது போன்ற சூழலில் இருந்து வியாபாரிகளும் ,விவசாயிகளும் மீண்டு வர குமரி மாவட்டத்தில் மா கூழ் தயாரிக்கும் ஆலையை அரசு அமைக்க வேண்டும் என தற்போது விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 146

0

0

Leave a Reply