அஜித்தின் பைக்கர்ஸ் குழுவுடன் அட்வென்ச்சர் பைக் ரைடு.. மனம் திறந்த மஞ்சுவாரியர் போட்ட ட்வீட்..!

Author: Vignesh
28 September 2022, 3:57 pm

நடிகர் அஜித் கடந்த சில வாரங்களாக பைக் ரைடில் தான் இருந்தார். ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து அவர் இந்தியாவின் பல இடங்கள், லடாக் என பைக் ரைடு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.

அஜித் தற்போது தான் அதை முடித்துவிட்டு ‘துணிவு’ படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க்க வெளிநாட்டுக்கு கிளம்பி சென்றிருக்கிறார்.

துணிவு படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கும் நடிகை மஞ்சு வாரியரும் லடாக் பைக் ட்ரிப்பில் உடன் சென்றிருந்தார். அந்த புகைப்படங்களை பதிவிட்டு அவர் இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

அதே போல் “Travel doesn’t become adventure until you leave yourself behind” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், “ உங்களை விட்டு நீங்கள் பிரியாத வரையில் பயணம் சாகசமாகாது” என்று பதிவிட்டு இருக்கிறார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!