மலையாள மெகா ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் வாரிசு நடிகரின் மனைவி – அதுவும் எப்படிப்பட்ட படம் தெரியுமா..?

Author: Vignesh
28 September 2022, 4:48 pm
Quick Share

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஜோதிகா. 20 வருடங்களுக்கு முன் டாப் ஹீரோயினாக கலக்கி வந்த நடிகை ஜோதிகா, தன் காதல் கணவரான சூர்யாவை கரம் பிடித்த பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார், பின் நீண்ட இடைவெளிக்குப் பின் ‘36 வயதினிலே’ படத்தில் நடித்தார்.

அதன்படி கடைசியாக அவர் நடிப்பில் உடன்பிறப்பபே திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் உருவாகும் மலையாள திரைப்படத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் அப்படத்தை Jeo Baby இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 667

0

1