Manjummel Boys பட Vibe… குணா குகை பகுதியில் தடையை மீறிச் சென்ற 3 இளைஞர்கள் கைது!!!

Author: Babu Lakshmanan
11 March 2024, 9:42 pm

கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தளமாக உள்ள குணா குகை பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதிக்கு நுழைந்த மூன்று இளைஞர்கள் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலக அளவில் பிரபலமான சுற்றுலா தளமாகும். கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களாக இருக்கக்கூடிய பகுதிகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில் தற்போது மலையாளம் மொழியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி இருக்கக்கூடிய படம்தான் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம். இப்படத்தை தொடர்ந்து குணா குகையில் வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே இருந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குணா குகையை கண்டு ரசித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குகைக்கு செல்லக்கூடிய பகுதி முழுவதுமாக வனத்துறை சார்பாக மூடப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் மேலிருந்து இயற்கை காட்சிகளை பார்க்க வனத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இப்படத்தின் மோகத்தால் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இளைஞர்களான கிருஷ்ணகிரியை சேர்ந்த விஜய், பாரத் மற்றும் ராணிப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித் ஆகியோர், தடுப்புகளை கடந்து சென்று ஆபத்தான முறையில் செல்பி எடுத்ததாக மூன்று பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் எடுக்கும் பொழுது கடந்த ஆண்டு வந்த படக்குழுவினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியை விட நீண்ட தூரம் சென்று பட குழுவினர் படம் எடுத்ததாக கூறப்பட்டு, அப்போது பெரும் சர்ச்சையாக கிளம்பி நிலையில், வனத்துறை சேர்ந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு சென்றனர். பிறகு தடையை மீறி சென்ற பட குழுவினருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து குகைகுள் போக முயன்றவர்கள் வனத்துறை கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!