ஆற்றில் மர்ம முறையில் மிதந்து வந்த சடலம்…!! போலீசார் விசாரணை…!

Author: kavin kumar
16 February 2022, 7:04 pm

தருமபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இறந்து மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும் கர்நாடக, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்று மகிழ்வர். இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொங்கு பாலம் ஆடியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்து வந்துள்ளது. இதைப் பார்த்த பரிசல் ஓட்டிகள் ஒகேனக்கல் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஒகேனக்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத நபர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பது இந்த மாதத்திலேயே இரண்டாவது சடலம் என்பது குறிப்பிடதக்கது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!