இந்த ஒரு வாக்கியத்தைத் தவிர எதுவும் தெரியாதா..? ஊடக விவாதத்தில் குஷ்பூவிடம் பல்ப் வாங்கிய திருமாவளவன்..!

28 October 2020, 5:36 pm
Kushboo_THirumavalavan_UpdateNews360
Quick Share

மனு ஸ்மிரிதி நூல் மூலம் இந்தப் பெண்கள் குறித்து திருமாவளவன் சமீபத்தில் இழிவாகப் பேசிய நிலையில், பாஜகவிடமிருந்து குறிப்பாக சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ முன்னணியில் இருந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.

திருமாவளவன் கருத்துக்கு எதிராக பாஜக மகளிர் அமைப்பு போராட்டம் அறிவித்து, பின்னர் அதற்கு தடை, குஷ்பூ கைது, மற்றும் சில இடங்களில் பாஜக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் இடையே மோதல் போன்ற பல காட்சிகளை தமிழகம் கண்டு வருகிறது.

திருமாவளவன் போன்ற தமிழக அரசியல்வாதிகள் மேடைப்பேச்சு மற்றும் தங்களுக்கு ஆதரவான கூட்டங்களில் “சரக்கு மிடுக்கு” என்பது போல் பேசி கைத்தட்டல் வாங்க மட்டுமே தகுதியானவர்கள் என்று, வேறுபட்ட கருத்துக்களை கொண்டவர்களுடன் ஊடக விவாதம் செய்தவற்கு தகுதியானவர்களா எனும் கேள்வி, தற்போது டைம்ஸ் நவ் சேனலில் குஷ்பூவுடன் அவர் மேற்கொண்ட ஊடக விவாதம் மூலம் எதிரொலிக்கிறது.

டைம்ஸ் நவ் சேனலில் நடந்த ஒரு விவாதத்தில் குஷ்பூ, “17’ஆம் நூற்றாண்டில், மற்றும் அதற்கு முந்தைய காலகட்டங்களில் இருந்த மனு ஸ்மிரிதி தற்போது பயன்பாட்டில் இல்லை. அதை பின்பற்றுமாறு யாரும் வலியுறுத்தப்படுவதுமில்லை.
பிரதமர் மோடி உட்பட அனைவரும், இந்தியா, நீங்கள் பின்பற்றுவதாக சொல்லும் அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பை பின்பற்றுவதாகவே சொல்கிறோம்.” எனக் கூறினார்.

அதற்கு பதிலளித்த திருமாவளவன், “சட்டம் இருந்தாலும் மனு ஸ்மிரிதி தான் உண்மையில் தினமும் நாம் பின்பற்றுகிறோம்” என்பதை மட்டுமே திரும்பத் திரும்ப கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நெறியாளர், அப்படியெனில் எஸ்சி/எஸ்டி சட்டங்கள் எல்லாம் செயல்பாட்டில் இல்லையா எனக் கேட்க, அதற்கும் திருமாவளவன், “தினமும் பின்பற்றுகிறோம்” எனும் அதே பல்லவியை திரும்ப எடுத்து விட்டது சமூக ஊடகங்களில் கடும் கேலிக்கு உள்ளாகியுள்ளது.

மனு ஸ்மிரிதி தான் தற்போது இந்தியா முழுக்க தினமும் பயன்பாட்டில் இருக்கிறதென்றால், கலப்புத் திருமணங்கள் எப்படி நடக்கிறது? பெண்கள் எப்படி பல துறைகளிலும் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்? என்பன போன்ற கேள்விகளை நெட்டிசன்கள் வைத்து வருகின்றனர்.

அந்த விவாதத்தில் ஒரு பக்கம் குஷ்பூ, மனு ஸ்மிரிதி தற்போது பயன்பாட்டில் இல்லை என்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக என்ன செய்யலாம் எனவும் விரிவாக பேசிக்கொண்டிருக்க, மறுபக்கம் திருமாவளவன் அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்ததைப் பார்த்து அவரது விசிக தொண்டர்களே அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

“நமக்கு சார்பான கூட்டத்தில் பேசினோமா, போராட்டத்தில் கலந்து கொண்டோமா” என்றில்லாமல்  இவருக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என அவரது கட்சித் தொண்டர்கள் புலம்புகின்றனர்.

Views: - 38

0

0

1 thought on “இந்த ஒரு வாக்கியத்தைத் தவிர எதுவும் தெரியாதா..? ஊடக விவாதத்தில் குஷ்பூவிடம் பல்ப் வாங்கிய திருமாவளவன்..!

Comments are closed.