மேம்பட்ட சிகிச்சை வழங்க வலியுறுத்தல் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசு மருத்துவமனை முற்றுகை..!!

22 September 2020, 11:14 am
Quick Share

கோவை: கொரோனா தொற்று நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சை வழங்க வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை அரசு மருத்துவமனையை முற்றுகையிடும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சை அளிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மேம்பட்ட சிகிச்சை வழங்க வேண்டும், நோய்த் தொற்று இருக்கிறதா? இல்லையா? என்று அறிந்து கொள்ள எடுக்கும் கால அவகாசத்தை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Views: - 8

0

0