பள்ளிக் குழந்தைகளுக்கான பிரத்யேக முகக்கவசம்! கோவையில் அறிமுகம்..!
21 August 2020, 12:51 pmகோவை: கோவையை தலைமையிடமாக கொண்ட சென்ட்ராய்டு இன்ஜினியர்ஸ் நிறுவனம், பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் சென்எக்ஸ் பிராண்ட் முக கவசங்களை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.
கோட்டிங், கோட்டிங் இல்லாதவை என இரு ரகமாக அறிமுகமாகி உள்ள இந்த முக கவசங்கள் மீண்டும் மீண்டும் பலமுறை பயன்படுத்தக்கூடியவை. குறிப்பாக இவை பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவற்றின் சிறப்பம்சங்கள் குறித்து நிறுவனத்தின் சென்எக்ஸ் முக கவசம் புரோமோட்டர் வெங்கட் கூறியதாவது: ஸ்வீடன் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த முக கவசங்கள், வைரஸ் தொற்றில் இருந்து 99 சதவீதம் பாதுகாப்பு தரக்கூடியவை ஆகும். சிவப்பு, கருப்பு மற்றும் கிரே என 3 வண்ணங்களில் பெரியது, நடுத்தரம், சிறியது, (கிட்ஸ்) என 3 சைஸ்களில் அறிமுகம் செய்துள்ளோம்.
அறிமுக சலுகையாக அதன் தயாரிப்பு செலவின் பாதியை (50 சதவீதம்) விலையாக நிர்ணயித்து இருக்கிறோம். உயர்ந்த தரத்துடன் கூடிய இந்த முக கவசங்கள் சர்வதேச தரச்சான்றிதழ் பெற்றதாகும். மேலும் சுயஉதவிக் குழுவினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த முக கவசங்களை அவர்களுக்கு அளித்து அவற்றை விற்பனை செய்து பணத்தை செலுத்துமாறு கூற உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
0
0