பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்.. உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் பலி.. சீர்காழியில் அதிர்ச்சி

26 February 2021, 1:14 pm
Quick Share

மயிலாடுதுறை: சீர்காழி அருகே வீட்டில் தனியாக இருந்த இளம் பட்டதாரி பெண் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழப்பு குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் கலையழகி(26). முதுகலை பட்டதாரியான இவர் இன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

தாய் தமிழ் செல்வி வெளியே சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது மகள் இரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார். அதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.


தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெண்காடு காவல்துறையினர் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தாய் தமிழ்ச்செல்வி மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக திருவெண்காடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து இறப்புக்கான காரணம் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் மர்மமான முறையில் இறந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Views: - 91

0

0