கோவை மாநகராட்சிக்கான பட்ஜெட்டை தாக்கல்: ரூ.19 கோடி நிதி பற்றாக்குறை இருப்பதாக அறிவிப்பு..!!

Author: Rajesh
30 March 2022, 12:11 pm

கோவை: கோவை மாநகராட்சிக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் ரூ.19 கோடி நிதி பற்றாக்குறை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் விக்டோரியா ஹாலில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன்படி, 2022 – 23 நிதியாண்டில் வருவாய் மற்றும் மூலதன வரவு ரூ.2,317.97 கோடி வருவாய் மற்றும் மூலதன செலவு ரூ.2,337,28 கோடி செலவு. 2022 – 23 நிதியாண்டில் நிதி பற்றாக்குறை ரூ19.31 கோடி.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பின்வருமாறு:

2 நாட்களுக்கு ஒருமுறை சீரான குடிநீர் வழங்குதல் – ரூ5.36 கோடி

பில்லூர் 2ம் குடிநீர் திட்டக் குழாயை மாற்றி அமைத்தல் – ரூ5 கோடி.

அம்ரூத் 2.0 வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சிக்கு ரூ883 கோடி.

அம்ரூத் 24/7 குடிநீர் வழங்கல் திட்டத்திற்கு ரூ646.71 கோடி.

நீர் நிலை தூர்வாருதல் – மழைநீர் சேகரிப்பு தொட்டி புனரமைத்தல் ரூ.40 லட்சம்.

மாதிரி பள்ளி அமைக்க ரூ2.46 கோடி

மாநகராட்சி பள்ளி உட்கட்டமை மற்றும் கழிவறை மேம்படுத்த – ரூ 8 கோடி

பள்ளிகளில் நூலகம் அமைக்க ரூ50 லட்சம்

விளையாட்டு திறனை மேம்படுத்த – நூலகம் அமைக்க, அறிவுசார் மையம் அமைக்க ரூ2.50 கோடி

திடக்கழிவு மேலாண்மை ரூ21.2 கோடி

அரசு நலத்திட்டங்கள் ரூ 2.97 கோடி

சாலை பணிகள் ரூ189.72 கோடி

பாதாள சாக்கடை திட்டம் – ரூ1436.58 கோடி

பொது சுகாதாரம் ரூ 18.91 கோடி.

பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் ரூ13 கோடி.

மகளிர் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ31.1 கோடி.

மனிதவள மேம்பாடு ரூ4.30 கோடி.

குறைதீர்க்கும் சேவைகள் ரூ320.22 கோடி.

புராதானக் கட்டிடங்கள் புனரமைப்பு ரூ.10 லட்சம்.

வருவாய் பிரிவு வசூல் மையம் மற்றும் மேம்பாடு ரூ.44.68 கோடி.இதர திட்டங்கள் ரூ15.45 கோடி.

இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!