அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க ம.தி.மு.க.வினருக்கு மறுப்பு : சாலை மறியல்!!

15 September 2020, 2:41 pm
MDMK Mariyal - updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டியில் அண்ணா சிலைக்கு மதிமுகவினர் மாலை அணிவிக்க காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தால் மதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பேரறிஞர் அண்ணாவின் 112 பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தாலூகா அலுவலகம் அருகேயுள்ள அண்ணா திருவுருவசிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதே போன்று திமுகவினரும் அண்ணா திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்நிலையில் மதிமுகவினர் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் தாலுகா அலுவலகம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக சென்றனர். ஆனால் அவர்களை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.

அந்த அண்ணா சிலை அதிமுகவினரால் நிறுவப்பட்டு பராமரிப்பு செய்து வருவதால் அனுமதிக்க முடியாது என்று காவல்துறையினர் மறுத்த காரணத்தினால் மதிமுகவினர் காவல்துறையை கண்டித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் டி.எஸ்.பி கலைக்கதிரவன் பேச்சுவார்த்தை நடத்தினர். முன் அனுமதி பெறமால் மாலை அணிவித்து மரியாதை செய்யமுடியாது என்று கூறியதை தொடர்ந்து மதிமுகவினர் கலைந்து சென்றனர்.

Views: - 6

0

0