கன்னட நடிகையின் மீ டு புகார்: போதிய ஆதாரங்கள் இல்லை…வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார் அர்ஜூன்..!!

Author: Aarthi Sivakumar
30 November 2021, 4:16 pm
Quick Share

நடிகர் அர்ஜூன் மீது நடிகை சுருதி ஹரிஹரன் கொடுத்த மீ டு புகாரில் போதிய ஆதாரமில்லை என்பதால் அர்ஜுன் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழில், நெருங்கி வா முத்தமிடாதே, நிபுணன், சோலோ, அமெரிக்க மாப்பிள்ளை, வேதம் உட்பட சில படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் சுருதி ஹரிஹரன். இவர், நிபுணன் படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்தார்.

கடந்த 2018ம் ஆண்டு மீ டு புகார் பரபரப்பை ஏற்படுத்தியபோது நடிகை சுருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜுன் மீது மீ
டு புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் 2018ம் வருடம் புகார் அளித்தார். சுருதியின் புகாரை மறுத்த அர்ஜுன் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக சக நடிகர் மற்றும் நடிகைகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதிய ஆதாரம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அர்ஜுன் குற்றமற்றவர் என்று கூறி அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக பெங்களூரில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Views: - 260

0

1