நிவர் புயலால் ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு! இன்று மீண்டும் தொடங்கியது!!
30 November 2020, 11:06 amசென்னை : நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட் மருத்துவ கலந்தாய்வு இன்று மீண்டும் தொடங்கியது.
தமிழகத்தில் இளநிலை மருத்துவபடிப்புக்கான கலந்தாயவு கடந்த 18ஆம் தேதி துவங்கியது. முதலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் மூன்று நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
பின்னர் ராணுவ வீரர்களின் குழந்தைகள் மற்றும் விளையாட்டு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 21ஆம் தேதி நடந்து முடிந்தது.
இதையடுத்து 23ஆம் தேதி பொதுப்பிரிவினருக்கான முதல் நாள் கலந்தாய்வு தொடங்கியது. தரவரிசைப் பட்டியலில் முதல் 15 மாணவர்கள் அதில் பங்குபெறாமல் இருந்தனர். இந்த கலந்தாய்வில் 308 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டன.
ஆனால் நிவர் புயல் காரணமாக 29ஆம் தேதி வரை கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்தது. இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட கலந்தாய்வு இன்று முதல் மீண்டும் தொடங்கியது.
0
0