கோவையில் பிரபல தனியார் கல்லூரி விடுதியில் இருந்து மருத்துவ மாணவி சடலமாக மீட்பு : விசாரணையில் வெளியான ‘திடுக்’ தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2022, 6:49 pm

கோவை : கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வானுவம்பேட் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்வர்தன். இவரது மகள் நந்தினி (வயது 22). கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மாணவியாக நான்காம் ஆண்டு பயின்று வருகிறார்.

கல்லூரியின் விடுதியில் தங்கி பயின்று வரும் நந்தினி இன்று காலை 11.30 மணியளவில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், “அறுவைசிகிச்சை செய்யும் கத்தியை பயன்படுத்திக் கொண்டு மணிகட்டு நரம்புகளை அறுத்த பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாணவியின் மரணம் குறித்து பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் விமானம் மூலம் மாணவியின் பெற்றோர்கள் கோவை வருகின்றனர்.

அவர்கள் வந்த பிறகு மாணவியின் உடல் உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது” என்றனர்.

தற்கொலைக்கான முழு காரணம் இன்னும் தெரியவில்லை என்ற சூழலில் போலீசார் இது குறித்து விசாரணை நடத்துகின்றனர்.

  • vismaya mohanlal introduce as a heroine in thudakkam movie சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!