அதிகாரிகள் இல்லாமல் ‘மீட்டிங்’.. கோவை எம்.பி ‘அப்செட்‘ : பெட்ரோலிய நிறுவனத்தினரிடம் வாக்குவாதம்..!

13 July 2021, 1:04 pm
MP Natarajan- Updatenews360
Quick Share

கோவை : பெட்ரோலிய விநியோகஸ்தர் தேர்வுக்கான நிகழ்ச்சியில் கோவை பாராளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் யாரும் வராததால் பாராளுமன்ற உறுப்பினர் ஆவேசம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் கோவை மாவட்டத்தில் பெட்ரோல் விற்பனை சப்ளைக்கான விநியோகஸ்தர் தேர்வுக்கான குலுக்கல் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், HPCL நிறுவனங்கள் நடத்தும் இந்நிகழ்ச்சிக்கு பார்வையாளராக கலந்து கொள்ள மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அந்நிகழ்விற்காக குறித்த நேரத்தில் மக்களவை உறுப்பினர் சென்றும் நிகழ்ச்சியின் நிறுவன அதிகாரிகள் யாரும் வராததாக கூறப்படுகிறது. சுமார் ஒருமணி நேரம் காத்திருந்தும் நிறுவனத்தார்கள் யாரும் வராததால் இந்நிகழ்ச்சி கண்துடைப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மக்களவை உறுப்பினரை அவமதிப்பதாகவும் கூறி மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அங்கிருந்த சில நிகச்சி ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியை வேறு ஒரு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் காலதாமதமாக இன்று நடைபெற்றால் அதற்கான மன்னிப்பு கடிதத்தை வழங்க வேண்டும் என்றும் அங்கு இருந்தவர்களிடம் தெரிவித்தார். மேலும் இது குறித்து பெட்ரோலிய அமை

Views: - 127

0

0