மேகதாது விவகாரம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு

Author: Udhayakumar Raman
1 July 2021, 8:57 pm
Quick Share

வேலூர்: மேகதாது அணை பிரச்னை தொடர்பாக வரும் 5 அல்லது 6ம் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பேச உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூரில் இன்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை சார்பில் ,வேலூர் மாவட்ட வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு மூர்த்தி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே எஸ் மஸ்தான் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-மேகதாது அணை பிரச்னை தொடர்பாக வரும் 5 அல்லது 6ம் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பேச உள்ளேன். இதற்காக 5, தேதி டெல்லி செல்கிறேன். பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்படும் என உறுதி பட அவர் தெரிவித்தார்.

Views: - 399

0

0