ஆடை கிழிந்து அலங்கோலமாக திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் : புதிய ஆடை மாற்றிவிட்ட காவலர்கள்!! (வீடியோ)

19 November 2020, 7:31 pm
Police Humanity - Updatenews360
Quick Share

திருவாரூர் : மன்னார்குடியில் மனநலம் பாதிக்கப் பட்டவருக்கு புதிய உடை மாற்றி விடும் காவலர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ரோந்து காவலராக பணிபுரியும் பிரகாஷ் மற்றும் கார்த்திகேயன் இருவரும் ரோந்து பணியில் இருந்தபோது மன்னார்குடி பேருந்து நிலையத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர் ஒரு போதிய உடை இன்றி ஒற்றை கந்தல் துணி மட்டுமே அணிந்திருந்தார்.

இதனை கண்ட காவலர் பிரகாஷ் மற்றும் கார்த்திகேயன் இருவரும் புது ஆடைகளை வாங்கி வந்து மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு உடைகளை மாற்றி உள்ளனர். இது குறித்த வீடியே ஒன்று சமுக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது.

இதனை பார்த்த மக்கள் போலீசார் இருவரையும் பாராட்டி உள்ளனர். வீடியோ வைரலானதை தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் துரை அவர்களும் காவலர்கள் இருவரையும் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.

Views: - 19

0

0