செல்போன் வாங்கித் தர முடியாத கூலித்தொழிலாளி.. பாதித்த படிப்பு : விரக்தியில் தற்கொலை செய்த மகன்!!

14 July 2021, 1:40 pm
Online Class Suicide- Updatenews360
Quick Share

கோவை : ஆன்லைன் வகுப்பிற்கு பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுக்காததால் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூரை அடுத்த அசோகபுரம் பகுதியில் குடியிருந்து வருபவர் பாண்டி. கூலி வேலை செய்து வரும் இவருக்கு 15 வயதில் அருள் செல்வன் என்ற மகன் உள்ளான்.

அருள் செல்வன் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்று வருவதால் படிப்பதற்காக மொபைல் போன் வாங்கித் தருமாறு வீட்டில் கேட்டுள்ளான்.

தந்தை பாண்டி கூலி வேலைக்கு செல்வதால் உடனடியாக மொபைல் போன் வாங்க முடியாததால் கொஞ்ச நாளில் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிவிட்டதால் மொபைல் போன் இல்லாததால் தன்னால் படிக்க முடியவில்லை என கூறி அருள் செல்வன் வீட்டில் சண்டை போட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் மொபைல் போன் வாங்கிக்கொடுக்காத விரக்தியில் நேற்று முந்தினம் நள்ளிரவில் வீட்டில் அனைவரும் தூங்கிய நிலையில் சமையல் அறைக்கு சென்று அருள் செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

துடியலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுவனை உடலை மீட்டு உடற் கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரானை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்கிக் கொடுக்காத விரக்த்தியில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 109

0

0