பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கப்படும் இலவச பேருந்து பயண அட்டையில் குளறுபடி …! கட்டணம் வசூலித்த நடத்துனர்…!!

Author: kavin kumar
19 January 2022, 10:58 pm
Quick Share

கோவை : கோவையில் பேருந்தில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரிடம் இலவச பேருந்து பயண அட்டை இருந்தும் கட்டணம் வசூலித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் தொடர்பு சாதனங்களான நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலி ஆகியவை மக்களுக்கும் அரசுக்கும் உள்ள தொடர்பை வலுப்படுத்தும் முக்கிய சாதனங்களாக உள்ளன. இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள் செய்திகள் சேகரிப்பதற்காக இலவச பேருந்து பயண அட்டையை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் கோவை கோட்ட பேருந்தில் பத்திரிக்கையாளர்களுக்கான பஸ் பாஸ் வைத்துக்கொண்டு, கோவை மாவட்ட தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த ஒரு ஒளிப்பதிவாளர் செய்தி சேகரிக்க தங்களது கேமராவை எடுத்து சென்றுள்ளார். கேமராவுக்கு பஸ் பாஸ் செல்லாது என டிக்கெட் வாங்க சொல்லி நடத்துனர் வற்புறுத்தியுள்ளார்.

இது குறித்து கோவை கோட்டத்தின் மேலாளரிடம் போனில் தொடர்பு கொண்டு பத்திரிகையாளர் கேட்டபோது, கேமராவுக்கு என பேருந்து இலவச பயண அட்டையில் பயணம் என்பது இல்லை என்றும், ஒளிபதிவளருக்கு மட்டுமே இந்த அட்டை செல்லகூடியது என்று தெரிவித்துள்ளார். பின்னர் நடத்துனர் செல்வராஜ் என்பவர் கேமராவுக்கு மட்டும் 85ரூபாய் கட்டணமாக வசூலித்துள்ளார். பின்னர் பேருந்தில் ஆய்வு மேற்கொண்ட முதுநிலை தணிக்கையாளர் ராஜேந்திரனிடம் கேட்ட போது, கேமராவுக்கு கட்டணம் உண்டு என்றும், இதுவரை மேல் இடத்தில் இருந்து எந்த ஒரு தகவலும் கொடுக்கவில்லை என தெரிவித்தார்.

தற்போது பத்திரிகையாளர்களுக்கென கொடுக்கப்படும் பேருந்து இலவச பயண அட்டையில் எந்த ஒரும் பயணமில்லாமல் போனது. மேலும் பேருந்தில் பயணம் செய்யும் பத்திரிகையாளர்கள் இலவச பயண அட்டையை நம்பி செய்தி சேகரிக்க கேமராவை எடுத்து செல்ல வேண்டாம் என அந்த ஒளிப்பதிவாளர் தெரிவித்துள்ளார். இதனால் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் என்ன செய்வது என்று குழம்பி போய் உள்ளனர்.

Views: - 219

0

0