கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்: சாட்டிலைட் மூலம் சர்வே…ஒரே நாளில் 18 இடங்களில் ஆய்வு!!

Author: Aarthi Sivakumar
6 September 2021, 12:35 pm
Quick Share

கோவை: கோவையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சர்வே பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

கோவையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு மெட்ரோ ரயில் அமைப்பதற்கான ஆலோசனைகள் கடந்த அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்டு அதற்கான முதற்கட்டமாக சுமார் ரூ.5 ஆயிரம் கோடியில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், கோவையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க சாட்டிலைட் மூலம் சர்வே எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கோவையில் இன்று ஒரே நாளில் 18 இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

டிரிம்பிள் R8s என்ற கருவி மூலம் இந்த சர்வே நடைபெற்று வருவதாகவும், ரயில் பாதைக்கு தூண்கள் அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து இந்த சர்வே மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்றும் மாவட்டத்தில் மொத்தம் 75 இடங்களில் இந்த சர்வே நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Views: - 199

0

0