சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியீடு!!!

5 September 2020, 4:34 pm
Chennai metro train - updatenews360
Quick Share

சென்னை : ஊரடங்கு தளர்வை தொடர்ந்து வரும் 7ம் தேதியன்று காலை 7 மணி முதல்‌ இயக்கப்படும்‌ சென்னை மெட்ரோ ரயிலில்‌ பயணிக்க பயணிகளுக்கு பயண அட்டையை பயன்படுத்துவதற்கான வழிமுறைககளை சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்‌ நடவடிக்கையாக சென்னை மெட்ரோ ரயில்‌ நிறுவனம்‌ ரயில்‌ நிலையங்கள்‌ மற்றும்‌ ரயில்‌ பெட்டிகளில்‌ சுகாதாரமான காற்றை பராமரித்தல்‌, அடிக்கடி கிருமி நாசினி மூலம்‌ சுத்தம்‌ செய்து தொற்று பரவலை தடுத்தல்‌, ரயில்‌ நிலைய வளாகங்களை தூய்மைப்படுத்துதல்‌ என பல்வேறு துரித நடவடிக்கைகளையும்‌ பயண சீட்டு மற்றும்‌ வாகன நிறுத்தம்‌ ஆகிய இடங்களில்‌ தொடர்பில்லா மற்றும்‌ பணமில்லா மின்னனு பரிவர்த்தனைகளையும்‌ ஊக்குவித்துள்ளது.

பயணச்சீட்டு வசதிகள்‌ :

பயண திறன்‌ அட்டைகளை பாதுகாப்பான முறையில்‌ புதுப்பிக்கவும்‌, புதிதாக பெறவும்‌ வழக்கம்‌ போல்‌ டிக்கெட்‌ கவுண்டர்கள்‌ செயல்படும்‌.

மின்னனு அலைவரிசையில்‌ தொடாமல்‌ பயண அட்டையை பயன்படுத்தும்‌ QR கோடு வசதிகளும்‌ அனைத்து மெட்ரோ ரயில்‌ நிலையங்களிலும்‌
உள்ளன.

கூட்ட நெரிசலை தவிர்க்க உதவும்‌ வகையில்‌ பயணச்சீட்டு வழங்கும்‌
கருவி அருகே பயண அட்டைகளை புதுப்பிக்க, காலம்‌ நீட்டிக்க ஆளில்லா பயண அட்டை சான்றளிக்கும்‌ கருவிகள்‌ 32 ரயில்‌
நிலையங்களிலும்‌ அமைக்கப்பட்டுள்ளன.

இணையவழியாகவும்‌, மெட்ரோ ரயில்‌ நிலையங்களில்‌ அமைக்கப்பட்டுள்ள தானியங்கி கருவிகள்‌ வழியாகவும்‌ பணப்‌பரிவர்த்தனையற்ற திறன்‌ அட்டை புதுப்பிக்கும்‌ வசதிகள்‌ எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு வழிப்‌ பயண டிக்கெட்டுகள்‌ வழங்குவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தவிர்க்க முடியாத நிலையில்‌ தேவையின்‌ அடிப்படையில்‌ சுத்திகரிக்கப்பட்டு இவ்வில்லைகள்‌ வழங்கப்படும்‌

அனைத்து வாகன நிறுத்தங்களிலும்‌ மின்னனு பணப்பரிவர்த்தனைகள்‌ ஊக்குவிக்கப்படுகின்றன. காலாவதியான நிலுவைத்தொகை உள்ள வாகன நிறுத்த அட்டைகளை 2020 அக்டோபர்‌ 7 ஆம்‌ தேதிக்குள்‌ வாகன நிறுத்துமிடங்களில்‌ பயணிகள்‌ புதுப்பித்துக்கொள்ள வேண்டும்‌.

பயண அட்டை சான்றளிக்கும்‌ கருவி :

சென்னை மெட்ரோ ரயில்‌ நிறுவனம்‌ பயணிகளின்‌ நீண்ட வரிசைகளை தவிர்க்கும்‌ பொருட்டு அதி நவீன தானியங்கி பயணச்சீட்டு சான்றளிக்கும்‌ இயந்திரங்களை அனைத்து ரயில்‌ நிலையங்களிலும்‌ பயணச்சீட்டு வழங்கும்‌ இயந்திரங்கள்‌ முன்பு நிறுவி உள்ளது. இந்த கருவிகள்‌ கீழ்க்காணும்‌ வசதிகளை உள்ளடக்கியதாகும்‌.

பயன்படுத்தப்படாத நிலுவைத்‌ தொகையுள்ள திறன்‌ அட்டைகளின்‌ கால அளவை 2020 அக்டோபர்‌ 7 ஆம்‌ தேதிக்குள்‌ புதுப்பித்துக்கொள்ள வேண்டும்‌.

பயணிகள்‌ சென்னை மெட்ரோ ரயில்‌ இணையதளம்‌ மற்றும்‌ செயலிகள்‌ மூலம்‌ பயணச்சீட்டு வழங்கும்‌ கருவிகளுக்கு பதிலாக பயண அட்டை சான்றளிக்கும்‌ கருவிகள்‌ வாயிலாக புதுப்பித்துக்‌ கொள்ளலாம்‌.

பயணிகள்‌ தங்கள்‌ பயண அட்டை விவரங்களான திறன்‌ அட்டை
பயன்பாட்டுத்‌ தொகை, இருப்புத்தொகை, மீதமுள்ள பயண எண்ணிக்கை, பயணம்‌ குறித்த தகவல்கள்‌ ஆகியவற்றையும்‌ சரிபார்த்துகொள்ளலாம்‌.

QR குறியீட்டின்‌ மூலம்‌ பயண அட்டை பயன்படுத்தும்‌ வசதிகள் :‌

QR குறீயீடு எனும்‌ நவீன தொடர்பற்ற பயன்பாட்டு முறையினால்‌ கோவிட்‌-19 பரவலை கட்டுப்படுத்துதல்‌, நெரிசலை தவிர்ப்பது, சமூக இடைவெளியை கடைபிடிக்க செய்வது என பலவகை பாதுகாப்பு அம்சங்கள்‌ உறுதி செய்யப்பட்டுள்ளன.

பயணிகள்‌ இந்த QR குறியீடு வடிவில்‌ ஒருவழிப்பண அட்டை,
இருவழிப்பண அட்டை, பலவழி பயன்பாடு அட்டை ஆகியவற்றை
தேவைக்கு ஏற்ப பெறலாம்‌.

இந்த QR குறியீட்டை தொடுதலை தவிர்த்து பயன்படுத்தும்‌ வகையில்‌ குறிப்பிட்ட நுழைவு வாயில்‌ மற்றும்‌ வெளியேறும்‌ வாயில்களில்‌ நவீன ஊடுகதிர்‌ கருவிகள்‌ பொருத்தப்பட்டுள்ளன. இதன்‌ மூலம்‌ பயணிகள்‌ தொடுதலின்றி விரைந்து சமூக இடைவெளியுடன்‌ மெட்ரோ ரயில்களில்‌ பயணிக்கலாம்‌.

பயணவழி மாற்றியமைக்கும்‌ வசதி, பயணத்தை ரத்து செய்யும்‌ வசதிகள்‌ என பயணிகளின்‌ வசதிக்கேற்ப எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. மின்னனு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ காசட்டை , கடன் அட்டை (Credit Card), UPL, இணையவங்கி சேவை ஆகிய பயன்பாடுகள்‌ 32 ரயில்‌ நிலையங்களிலும்‌ செய்யப்பட்டுள்ளன, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0