காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை…! மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

14 August 2020, 12:04 pm
Mettur Dam- updatenews360
Quick Share

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 25,000 கனஅடியாக உயர்ந்து இருக்கிறது.

கடந்த சில வாரங்களாக காவிரி  நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்து வருகிறது. அதன் காரணமாக, கர்நாடகா மாநிலத்தில் அணைகள் வேகமாக நிரம்புகின்றன.

கபினி, கிருஷ்ணராஜ சாகா், நுகு அணைகளுக்கு வரும் மழைநீா் அப்படியே  காவிரி ஆற்றில் திறக்கப்படுகிறது. ஆகையால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து, மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது. 9ம் தேதி மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 90,000 கனஅடியாக உயர்ந்தது. பின்னர் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது.

இந் நிலையில் தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்த வருகிறது. அதனால். மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்த நீர் வரத்து 5,000 கன அடி வரை உயர்ந்து வினாடிக்கு 25,000 ஆக இருக்கிறது.

அணையின் நீர்மட்டம் தற்போது 98.59 அடியாகும். 63.02 டி.எம்.சி அளவு நீர் இருப்பு உள்ளது. அணையிலிருந்து 10,000 கனஅடி நீர் பாசனத்திற்காக திறக்கப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழைக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.