சர்வர் பிரச்சனையை காட்டி வேலைவாய்ப்பை வழங்காமல் இருக்கக்கூடாது: அமைச்சர் அறிவுறுத்தல்..!

Author: Vignesh
7 November 2022, 2:48 pm
minister meyyanathan - updatenews360
Quick Share

சர்வர் பிரச்சனையை காரணம்காட்டி 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வேலை வழங்காமல் இருக்க கூடாது என்றும் சர்வர் வேலை செய்யாவிட்டாலும் பணிக்கு வரும் அனைவருக்கும் நாள்தோறும் பணி வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆலங்குடி அருகே மாங்காட்டில் நடைபெற்ற அண்ணா மறுமலர்ச்சி திட்ட தொடக்க விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குளமங்கலம் தெற்கு மற்றும் மாங்காடு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது.

minister meyyanathan - updatenews360

இதில் அந்த ஊராட்சிகளில் பேபர் பிளாக் சாலை மற்றும் சிமெண்ட்சாலை,ஊரணி தூர்வாருதல் மற்றும் பள்ளிக்கூடத்திற்கு தேவையான கழிப்பறை அல்லது மிதிவண்டி பாதுகாப்பு நிலையம் அமைப்பதற்காக குலமங்கலம் தெற்கு ஊராட்சிக்கு ரூபாய் 50 லட்சமும் மாங்காடு ஊராட்சிக்கு ரூபாய் 63 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்நாதன் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

minister meyyanathan - updatenews360

அப்போது அவர் கூறுகையில்,

சர்வர் பிரச்சனையை காரணம் காட்டி 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை திரும்ப அனுப்பக்கூடாது என்றும் சர்வர் வேலை செய்யாவிட்டாலும் பணிக்கு வந்த பணியாளர்களுக்கு வேலை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதனை ஒன்றிய அலுவலர்கள் கண்காணித்து பணிக்கு வந்த அனைவருக்கும் வருகை பதிவேடு பதிவு செய்து சம்பளம் வாழங்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

மேலும், கஜா புயலால் விடுதலை இழந்த மக்களுக்கு ஏற்கனவே திமுக அரசு செயல்படுத்திய கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட உள்ளதாகவும், வீடுகள் இல்லாத பயனாளிகள் இதில் வீடுகளை பெற்று பயன்பட வேண்டும் எனவும் கூறினார்.

Views: - 147

0

0