அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு.. திடீர் டுவிஸ்ட்… நீதிபதி போட்ட உத்தரவு..!!

Author: Babu Lakshmanan
2 August 2023, 11:58 am

தூத்துக்குடி ; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது லஞ்ச ஒழிப்பு துறை தொடர்ந்த வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி அமலாக்கத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில் இவ்வழக்கு விசாரணை ஆக2ம் தேதி இன்று விசாரணைக்கு வந்தது.

கடந்த 2001 – 2006ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி வந்தார்.

இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக மனுதாரர்களுடன் இணைக்க கோரி அமலாக்க பிரிவினர் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை 80% முடிவடைந்துள்ளதால் இதில் அமலாக்க துறையை சேர்த்துக் கொள்ள முடியாது என அன்றைய தினம் லஞ்ச ஒழிப்பு துறையினர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனர்.

இநிலையில் அமலாக்க துறையின் மனு மீது அன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவியும் வழக்கிலிருந்து விலக்கு வாங்கியுள்ளனர். எனவே, ஆஜராகாத நிலையில் அவரது மகன்கள் ஆனந்த மகேஸ்வரன், ஆனந்த ராமகிருஷ்ணன் ஆஜரானார்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!